கர்த்தரின் நாமங்கள்
“நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124:8.
1. ஏல் அல்லது ஏலோஹீம்
“தேவன் சர்வத்தையும் ஆண்டு நடத்தும் வல்லமையுள்ளவர்” என்பது இதன் கருத்தாகும்.வேதாகமத்தின் முதல் வசனத்திலேயே இந்த நாமம் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் மட்டும் 2500 தடவைகள் இப்பெயர் காணப்படுகிறது.
2. யாவே அல்லது யெகோவா
“இருக்கிறவராய் இருக்கின்றேன்” (யாத் 3:14) என்பது இதன் கருத்தாகும். இந்நாமத்தை யூதர்கள் உச்சரிக்கத் துணியவில்லை. அப்பயத்தின் காரணமாக உடன்படிக்கைக்குரிய இப்பெயரை உச்சரிப்பது எவ்வாறு என்று அறியாதிருந்தார்கள். “யாவே” சரியான பூர்வக உச்சரிப்பு என்பது பல ஆராய்ச்சியாளருடைய அபிப்பிராயமாகும். இந்த பெயர் கொண்ட தேவன்
வாக்குமாறாதவர், தாம் செய்த உடன்படிக்கையை மீறாதவர். சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “யெகோவா” என்ற பெயரை பயன்படுத்த முயன்றும் அது சாதாரண மக்களுக்கு விளங்காத காரணத்தால் “LORD” என்று ஆங்கிலத்திலும், தமிழில் தடித்த எழுத்தில் கர்த்தர் என்றும் எழுதியிருக்கிறது.
3. அடோனாய்
இது ஒரு கெளரவமான பட்டப்பெயராகும். இறைவன் எல்லா மனிதரையும் ஆளுகிற வல்லமையுள்ள ராஜா (ஆதி 15:2) என்பது இதன் கருத்தாகும். இதற்கு ஆண்டவர், எஜமான், கணவன் என்ற அர்த்தங்களும் உண்டு. (யோவான் 13:13, 2 கொரி 11:23) எபிரெய சொல்லான இதன் அர்த்தம் தந்தையின் உள்ளங்கொண்டவர் என்பதாகும். ஏசாயா 64:8
“ஏல்” என்னும் பதத்துடன் தொடர்புடைய நாமங்கள்
- ஏல் -. ஏலியோன் -. ஆதி 14:18-20 – உன்னதமான தேவன்
- ஏல் -. ஷடாய் – யாத் 6: 3 – சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதி 17:1)
- ஏல் -. ஓலாம் – ஆதி 21:33 – சதாகாலமுள்ள தேவன்
- ஏல் – றோய் – ஆதி 16:13 -. என்னைக் காண்கிற தேவன்
- இம்மானு -. ஏல் – மத் 1 : 23 -. தேவன் நம்மோடிருக்கிறார்
“யெகோவா” என்னும் நாமத்துடன் தொடர்புடைய நாமங்கள்
- 1. யெகோவா – ஏலோஹீம் – காத்தார் நித்திய சிருஷ்டிகர் – ஆதி 1:26-28
- 2. யெகோவா – அடோனய் – கர்த்தரே ஆளுகை செய்கின்றவர் – ஆதி 15:1-3
- 3. யெகோவா – ராப்பா – கர்த்தரே குணமாக்குபவர் – யாத் 15:26
- 4. யெகோவா – நிசி – கர்த்தர் என் ஜெயக்கொடியானவர்- யாத் 17:15
- 5. யெகோவா – ஷாலோம் – காத்தா என் சமாதானம் – நியா 6:24
- 6. யெகோவா – ரூவா – கர்த்தரே என் மேய்ப்பர் – சங் 23:1
- 7. யெகோவா – ஸிட்கெனு – கர்த்தரே என் நீதி – எரே 23:6
- 8. யெகோவா – யீரே – காத்தா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் – ஆதி 22 : 8-14
- 9. யெகோவா – ஷம்மா – கர்த்தரே கூட இருக்கிறார் – எசே 48:35
- 10. யெகோவா – சப்போத் – கர்த்தர் சேனைகளின் தலைவர் – 1 சாமு 1:3
- 11. யெகோவா – ஏலோகேனு – உன் தேவனாகிய கர்த்தர் நானே – யாத் 20:2-7
- 12. யெகோவா – ஏலோகே – கர்த்தர் என் தேவனானவர் – சகரி 14:5
- 13. யெகோவா – ஏலோகினு – கர்த்தரே எங்கள் தேவனானவர் – சங் 95:6
- 14. யெகோவா – ஏலியோன் – கர்த்தரே உன்னதமான தேவன் – சங் 97:9
- 15. யெகோவா – ஓசேனு – கர்த்தரே உருவாக்குகிறவர் – சங் 95:6
- 16. யெகோவா – மெக்காதீஸ் – கர்த்தரே பரிசுத்தப்படுத்துகிறார் – லேவி 20:8
பிதா
பிதா
இப்பெயரை இயேசுகிறிஸ்து ஓர் உரிமையோடு சொன்னார். இதன் அர்த்தம் சகலத்தையும் உண்டு பண்ணுபவர் அல்லது மனிதனின் சிருஷ்டிகர் என்பதாகும். (அப் 17:28)
இயேசு
இது இணையில்லாத இனிய நாமம். இந்த நாமத்தில் அதிகாரம் உண்டு. இறைவன் தன் மக்கள் தன்னை எவ்விதம் அறிந்துகொண்டு, தம்மோடு உறவாட வேண்டும் என்று அதிகார பூர்வமாக வழங்கிய தேவனின் அற்புத நாமம் இதுவே. (யோவான் 2:23) இந்த நாமத்தில் நாம் அவரை எந்த சூழ்நிலையிலும் அழைக்கலாம்.
இயேசுவின் நாமம்
- நம் பாவங்களை மன்னிக்கும் நாமம் (1 யோவான் 2:12, அப்போஸ்தலர் 10:43)
- நம்மை இரட்சிக்கும் நாமம் (அப்போஸ்தலர் 2:21)
- நமக்கு தைரியத்தைத் தரும் நாமம் (அப் 9:27,29)
- நமக்கு ஆரோக்கியத்தைத்தரும் நாமம் (மல் 1:11)
- நம்மை தேவ பிள்ளைகளாக்கும் நாமம் (யோவான் 1:12)
- நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லும் நாமம் (யோவான் 20:31)
- நம்மை கெட்டுப்போகாமல் காக்கும் நாமம் (யோவான் 3:5)
- நம்மை பெலப்படுத்தும் நாமம் (அப் 3:16)
மாத்திரமல்ல, நம்முடைய இயேசுகிறிஸ்து நாமம் அதிசயமானவர் (ஏசாயா 9:6) எதைக் கேட்டாலும் தருபவர். (யோவான் 14:13-14) பிசாசுகளைத் துரத்துபவர் (மாற்கு 9:38-41) மகத்துவமான காரியங்களை செய்பவர் (மல் 1:11) இந்த நாமமே உலகத்தின் எந்த நாமத்திற்கும் மேலான சிறந்த நாமம் (பிலி 2:8-11)
2 Comments
Hi
praise the lord