எஸ்தர் என்கிற அத்சாள்
அத்சாள் (Hadassah)என்பது அவளுடைய முந்தைய எபிரேய பெயராக இருந்திருக்க வேண்டும் . அத்சாள் என்பதற்கு myrtle(மர்டல்) என்று அர்த்தம் . மர்டல் என்பது ஒருவகையான பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை. இது யூதர்கள் மதில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் குறிக்கிற ஒன்றாக காணப்படுகிறது . இது தமிழ் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள மிருதுச் செடியாகவும் இருக்கலாம் .
எஸ்தர் என்கிற எபிரேய பெயரோடு தொடர்புடைய பெர்சிய வார்த்தைகள் .
- Star – ஸ்டார் (மிருது செடியின் பூவின் வடிவம் காரணமாக )
- Ishtar (எரே 7:18 இல் சொல்லப்பட்டுள்ள வான தேவதை)
- Best – சிறந்தது
- Desired one – விரும்பத்தக்க
இவள் பென்யமீன் இனத்தானாகிய கீசின் மகனாகிய சிமேயியின் மகனாகிய அபியாயேலின் மகள் .(எஸ்தர் 2:15).
எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள். இவள் தாய் தகப்பனாற்ற அனாதையாக இருந்தாள் . இவள் தனது சிறிய தகப்பனாகிய மொர்தெகாய் ஆல் வளர்க்கப்பட்டாள் .