Sermon By Pastor JOTHY RAJAN(9585758975)
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சில காரியங்களுக்காக காக்க்குக்கிறார்கள். நம்மில் சிலர் எப்பொழுது கூட்டம் முடியும் வீடு சென்று கறிசோறு சாப்பிட முடியும் என்றும் , விவசாயிகள் சிலர் மழை எப்போ நிற்கும் / பெய்யும் என்றும் ,சிலர் கிறிஸ்மஸ் பண்டிகை எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர் .
1. பூமியில் ஆசீர்வதிக்கப்பட காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 37:34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
சங்கீதம் 37:9பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
இரண்டு நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது 1.காத்திருந்து, 2.அவருடைய வழியைக் கைக்கொள் அப்பொழுது ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்களை உயர்த்துவார் .
2.மரண கட்டுகள் விலக காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 33:18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும் .
எசேக்கியா ராஜா ஜெபம் பண்ணின பொது மரண கட்டுகளுக்கு விலக்கி காத்தார்
இராஜாக்கள் 20:1-4 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
3. வெட்கப்படாமல் இருக்க காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 25:3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
எரேமியா 20:11கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
இந்த உலகிலே நமக்கு இருளில் வாழும் ஜனங்களால் உபத்திரவம் உண்டு , அதில் காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்
4.வின்னப்பங்கள் கேட்கப்பட காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
லூக் 18:7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணவேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்லிருக்கிறார் , கேளுங்கள் கொடுக்கப்படும் என வாக்கு பண்ணியிருக்கிறார் , ஆகவே காத்திருந்து ஜெபிப்பதால் நம்முடைய காரியங்கள் வாய்க்கும் .
5. பெலனடைய காத்திருக்க வேண்டும்
ஏசாயா 40:31கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
காத்திருக்கும் பொது ஆவிக்குரிய பெலன் நமக்கு கிடைக்கிறது என அப்போஸ்தல நடபடிகள் 1.8 இல் இயேசு கிறிஸ்து வாக்கு பண்ணியிருக்கிறார் . நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் சோர்வடையும் பொது காத்திருந்து ஜெபிப்பதால் பெலனடைகிறோம் .
இந்த பிரசங்கம் JOTHY RAJAN அவர்களால் FGP Church Sivadi இல் 11-12-2022 அன்று பிரசங்கிக்க பட்டது