ஆதி 2: 10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
ஏதேன் தோட்டத்திலிருந்து நான்கு ஆறுகள் பிறக்கிறதை பார்க்க முடிகிறது, பைசோன், கீகோன், இதெக்கேல் மற்றும் ஐபிராத்து .
இதில் முதல் இரண்டு ஆறுகள் ஆகிய பைசோன், கீகோன் சரித்திரத்தின் படி எங்கு அமைந்துள்ளது என்பதை அறிய முடியவில்லை ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது ஆறுகளாகிய இதெக்கேல் மற்றும் ஐபிராத்து எங்கு அமைந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க முடிகிறது.
ஐபிரத்து நதியானது , அசீரியாவின் van lake என்கிற ஏரியிலிருந்து ஆரம்பித்து நாலாயிரத்து இருநூறு மைல்ஸ் ( 4200 ) பயணித்து பெர்சியன் கல்ப (persian gulf ) என்கிற கடலோடு இணைகிறது.
இதேக்கேல் (Tigris) நதியானது அரராத் மலையிலிருந்து துவங்கி கீழே ஜபிராத்து (யூப்ரடீஸ்) நதியுடன் வந்து இணைகிறது. இரு நதிகளும் 40 மைல்கள் சேர்ந்து பயணித்து பின் பெர்சியன் கல்ப் (பாரசீக வளைகுடா )கடலோடு இணைகிறது.
இந்நாட்களில் இந்த நதிகள் ஈரான் ஈராக் துருக்கி சீரியா ஆகிய நாடுகளின் நிலப்பரப்பு வழியாக செல்கிறது . ஆகவே ஏதேன் தோட்டம் இந்த நிலப்பரப்புக்கு இடையில் காணப்பட்டிருக்கலாம்.
சிலர் ஆபிரகாம் குடியிருந்த மெசொப்பொத்தாமியா தான் ஏதேன் தோட்டம் இருந்த இடமாக காணப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அப் 7:2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி
மெசொப்பொத்தோமியா – Mesopotamia என்கிற கிரேக்க வார்த்தைக்கு in between waters என்று அர்த்தம் அதாவது தண்ணீரின் நடுவே .
இந்த மெசொபொத்தோமியா பகுதியில் பண்டைய பாபிலோன் சாம்ராஜ்யம் காணப்பட்டது.
ஆதி 10: 9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
10 சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.
இதில் சொல்லப்பட்டுள்ள ஏரேக்கும் இன்றைய ஈராக்கும் ஒன்று.
ஆகவே ஏதேன் தோட்டம் பாபிலோன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் அதாவது இன்றைய ஈராக்கில் காணப்பட்டிருக்கலாம்.