இயேசுகிறிஸ்து சுவிசேஷ ஊழியத்திர்ற்கு ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கின்றார். குறிப்பாக அவர் சமாரிய ஸ்திரீ உடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சுவிசேஷ ஊழியம் எப்படி செய்யலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.
1. அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு சென்று , எளிதில் அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
இயேசு மீன் பிடிக்கிறவர்களை பிடிக்க வேண்டும் என்று கலிலேயாக் கடலோரமாய் நடந்து போனார். அவர்கள் இடத்திற்கு கடந்து சென்றார். மாற்கு 1 : 17.
2. ஏதாவது பொதுவான காரியத்தை பேசி ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
தாகத்திற்கு தண்ணீர் தா என்று தண்ணீரை மையமாக கொண்டு
தன் பேச்சை ஆரம்பிக்கிறார். யோவான் 4:7 -9 தண்ணீர் மேல் தன் சம்பாஷணைக்கு அஸ்திபாரம் போட்டார்.
3. ஆர்வத்தை அனல் மூட்டி எழுப்ப வேண்டும்:
இயேசு தண்ணிரைப் பற்றி பேசுவதிலிருந்து “ஜீவத்தண்ணீரைப்”
பற்றி பேசத் தொடங்கினார். தண்ணீரிலிருந்து ஜீவத்தண்ணீருக்கு மெதுவாக சம்பாஷணையில் நகர்ந்தார். (வசனம் 10)
4. அவசரம் கூடாது
ஆத்திரம் காரியத்தை கெடுக்கும். இயேசு அவசரப்பட்டு
எல்லாவற்றையும் உடனே சொல்லி முடித்துவிட வேண்டும் என நினைக்கவில்லை. அவர் பேச்சினால் அவள் ஆர்வம் (10) கிளரப்பட்டாலும் அவளுக்கும் பேச நேரம் கொடுக்கிறார். அவள் கேள்விகளுக்கு பொறுமையாகக் காத்திருக்கிறார்.
5. குற்றம் சுமத்தல் கூடாது
யோவா 4:16 – 19 “எனக்கு புருஷன் இல்லை” என்று அவள் சொன்னபோது இயேசு, அவள் பொய் சொல்கிறாள் என்று அவளைக் குற்றப்படுத்த விரும்பவில்லை. அவளே உண்மையை சொல்லிவிடக்கூடிய அளவில் பேச்சை விரிவாக்குகிறார்.
6. பக்கவழியாய் வேறு சம்பாஷனைக்குள் நுழையக்கூடாது.
யோவா 20-24 ஜீவதண்ணிரைக் குறித்து சம்பாஷித்துக் கொண்டிருக்கும்போதே, தேவனை தொழுது கொள்ளும் இடத்தைக் குறித்து விவாதம் நுழைகிறது. இப்போதைக்கு தொழுதுகொள்ளும் இடம் முக்கியமல்ல யாரை எப்படித் தொழுது கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம் இயேசு அதை அறிந்தவராய் உடனடியாக
அந்த கருத்துக்கு வந்து விடுகிறார்.
7. சுவிசேஷகன் கேட்போரின் முகத்திற்கு நேராக இயேசுவை கொண்டு வந்து நிறுத்த வேண்டும்
கிறிஸ்துவே சுவிசேஷத்தின் மையப்பொருள் அவ்வேலையை செவ்வனே செய்து முடித்துவிட்டால் நாமே தலைசிறந்த சுவிசேஷன். நம்மிடத்தில் அல்லது நம் மூலம் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டவனே மெய்யான சாட்சி அறிவிக்கப்பட வேண்டிய அறிய வேண்டிய தன்னை அவர் நேர்த்தியாக அவள் கண்களுக்கு முன்னே கொண்டுவந்து நிறுத்தினபடியால் அவள் உடனடியாக ஊருக்குள் படிச்சென்று அநேகரை கூட்டிக்கொண்டு
வருகிறாள். நல்லதொரு சாட்சியின் வேலை.