1. கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர்
சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்
சங்கீதம் 66:19 மெய்யாய் தேவன் எனக்கு செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்
நீதிமொழிகள் 15:29 கர்த்தர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார்
2. கர்த்தர் ஜெபத்தைக் காண்கிறவர்
2நாளாகமம் 7:15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்
நெகேமியா 1:6 உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்
3. கர்த்தர் ஜெபத்தைக் கவனிக்கிறவர்
2நாளாகமம் 7:15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்
நெகேமியா 1:11 உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக
சங்கீதம் 86:6 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
4. கர்த்தர் ஜெபத்தைக் கற்பிக்கிறவர்
மத்தேயு 6:8-13 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங் களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
5. கர்த்தர் ஜெபிக்க கட்டளையிடுகிறவர்
மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது
மத்தேயு 5:44; நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்
மாற்கு 13:33; அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
கொலோசெயர் 4:2;
1தெசலோனிக்கேயர் 5:17; இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
யாக்கோபு 5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
6. கர்த்தர் ஜெபத்தைத் தள்ளாதவர்
சங்கீதம் 66:20 என் ஜெபத்தைத் தள்ளாமலும் தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
7. கர்த்தர் ஜெபத்தை வெறுக்காதவர்
சங்கீதம் 102:16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.