தேசத்திற்கான ஜெபக்குறிப்புகள் 2 | Prayer Points TamilFor India

வேலை வாய்ப்புகள்

– நாட்டில் வேலையின்மை விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத பிரச்சனையும் உள்ளது. அதிகரித்து வரும் இந்த வேகம் தேசத்தை ஆபத்துக்கு நேராக எடுத்து செல்ல வாய்ப்பு உள்ளது

அனைவருக்கும் கல்வி

– ஒரு நல்ல கல்வி ஒரு சிறந்த எதிர் காலத்திற்கான அடித்தளமாகும். ஒவ்வொரு குடிமகனும் நல்ல கல்வியைப் பெற்றால் நிச்சயமாக நம் தேசம் சிறந்த இந்தியாவாக மாறும். ஆனால் இதில் இரண்டு சவால்கள் உள்ளன.

சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

– விதிகளை மீறி அதைப் பற்றி பெருமையாக பேசுவது பலரின் வழக்கமாகிவிட்டது. நம்மைப் பாதுகாக்க சட்டங்கள் உள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து செயல்படுவது நம்முடைய கண்களை நாமே குத்திக்கொள்வது போன்றது.

கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ சேவைகள்

– நோய் யாரையும் எந்த நேரத்திலும் தாக்கலாம். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் குடி மக்களுக்கு மலிவு விலையில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போது சில மருத்துவ வசதிகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருப்பதால் அவற்றை பெற முடியாமல் சாமானியர்கள் நோயுடன் இறுதிவரை போராடி வருகின்றனர்.

வெளிநாட்டு முதலீடுகள்

– இந்தியா வளரும் நாடாக இருப்பதால் வளர்ந்த நாடுகளிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்க வேண்டும். பல முதலீட்டாளர்கள் முன்வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு சரியான சூழல் நட்பு மற்றும் கொள்கைகள் இல்லாததால் பின்வாங்குகிறார்கள். நமக்கு தற்போதைக்கு தேவை பல முதலீட்டாளர்கள்.

மாசுக் கட்டுப்பாடு

– நம் நாட்டில் உள்ள பெரிய பிரச்சனையில் ஒன்று காற்று மாசுபாடு ஆகும். குழந்தைகள் உட்பட பலரை கொல்லும். வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது தவிர மற்ற மாசுகளும் உள்ளன, அது நம் சொந்த வட்டத்தில் உள்ள ஒருவரைத் தாக்கும் வரை யாரும் இதைக் குறித்து கவலைப்படுவதில்லை. இதை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை.

நேர்மையான நீதித்துறை

– ஒவ்வொரு நபருக்கும் நியாயமான வாழ்க்கை வாழ சுதந்திரம் உள்ளது. பல சமயங்களில் மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு இது கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். செல்வந்தர்களாலும், அதிகாரத்தில் இருப்பவர்களாலும் அநீதி இழைக்கப்பட்டு செய்வதறியாது திகைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *