ஒரு நடுநிலை அரசாங்கம்.
– எந்த மறைமுக திட்டங்கள் இல்லாமல் தேசத்தை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தால் மட்டுமே தேசம் முன்னேற்ற பாதையில் செல்ல முடியும். இப்போது அது மதம், மொழி, சாதி என பலவற்றால் பிளவுபட்டுள்ளது.
ஊழல் இல்லாத அரசியல்வாதிகள்
– ஊழல் அனைத்து மட்டங்களிலும் அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது. இது தேசத்தின் வளர்ச்சியை மோசமாகத் தடுத்து சாதாரண மக்களின் வாழ்வை கடினமாகிறது. பல நேரங்களில் மக்கள் ஊழலை எதிர்த்துப் போராடாமல் அதனுடன் ஒத்துப்போகிறார்கள்.
உண்மையுள்ள அரசு ஊழியர்கள்
– ஒரு பொறுப்பற்ற நபர் பல உண்மையாய் பணி செய்யும் பல ஊழியர்களை சோர்வடைய செய்யலாம் இந்த ஒரு நபரால் பலர் பாதிக்கப்படலாம். உண்மையில் பணி செய்யும் ஊழியர்கள் அடிக்கடி குறி வைக்கப்படுகிறார்கள். எனவே விரைவில் சோர்ந்து போகிறார்கள்.
வளர்ச்சித் திட்டங்கள்
– நமது தேசம் ஏராளமான அறிவுள்ள மக்கள் மற்றும் அதிக வளங்களைக் கொண்டது . எனேவே தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே தேவை. திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினால், தேசம் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.
வளர்ச்சித் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துதல்
பல நேரங்களில் தேவையுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு, இடைத்தரகர் மூலம் நன்மைகள் பறிக்கப்படுகின்றன. ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். விழிப்புணர்வு இல்லாததால் ஏழை மக்கள் சுரண்டப் படுகிறார்கள்.
இருக்கும் வளங்களின் அதிகபட்ச பயன்பாடு
– தேவன் தந்த ஒவ்வொரு வளமும் மனித குலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு ஆசீர்வாதம் அவை நம் தேசத்தில் ஏராளமாக உள்ளது. அவற்றை தவறாக பயன்படுத்துதல், மாசுபாடு, அறியாமை போன்ற பல்வேறு காரணங்களால் அது சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நாம் அவற்றை சரியாக பயன் படுத்தினால் நாம் இன்றைய நிலையில் இருந்திருக்கமாட்டோம்
பொறுப்புள்ள குடிமக்கள்
– தேசம் வளர்ச்சியைக் காண பொறுப்புள்ள குடிமக்கள் தேவை. ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தையும் சூழ்நிலைகளையும் குறை சொல்ல முடியாது. மக்கள் பழி விளையாட்டை விளையாடுகிறார்கள். மாற்றம் என்பது தனிமனிதர்கள் இடமிருந்தும் என்னிடமிருந்தும் தொடங்க வேண்டும்.