Notes by Pastor Jothy Rajan (9585758975)
1. தேவனை பகைக்கிறவர்கள்
யோபு 8:22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
2. முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள்
சங்கீதம் 25:3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
3. பொல்லாப்பைத் தேடுகிறவர்கள்
சங்கீதம் 71:24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்
சங்கீதம் 97:7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
4. அகங்காரிகள்
சங்கீதம் 119:78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
5. விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறவர்ள்
ஏசாயா 45:16 விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.
6. காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவர்கள்
நீதிமொழிகள் 18:13 காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
7. வழக்காடப் பதற்றமாய்ப் போகிறவர்கள்
நீதிமொழிகள் 25:8 வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே