1) அநுதின ஆகாரத்திற்காக ஜெபியுங்கள் –
மத்தேயு 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
2) ஊழியத்திற்கு வேலையாட்களை (ஊழியர்களை) அனுப்பும்படி ஜெபியுங்கள் –
மத்தேயு 9:38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
3) பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள ஜெபிக்க வேண்டும் –
லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
4) உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்க ஜெபிக்க வேண்டும் –
யோவான் 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.
5) சோதனைக்குட்படாதபடி இருக்க ஜெபிக்க வேண்டும் –
மாற்கு 14:38 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
6) மனுஷகுமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட) ஜெபிக்க வேண்டும் –
லூக்கா 21:36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.