Author: enlightningyourpaths

எரிச்சலின் ஆவி எண்ணாகமம் 5:14 எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், பொல்லாப்பு உண்டாக்கும் ஆவி நியாயாதிபதிகள் 9:23 அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார். 24 யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம்பண்ணினார்கள். பொல்லாத ஆவி 1 சாமுவேல் 16:14 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. பொய்யின் ஆவி 1 இராஜாக்கள் 22:22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது…

Read More

ஊழிய அர்ப்பணிப்பும் பெற்ற வாக்குத்தத்தமும் மேரி கிரேபியெல் (Mary Graybiel) என்பவர், 1882ஆம் ஆண்டு சுவிசேஷத்தை அறிவிக்க கடல் கடந்து பயணம் செய்த நான்கு பெண்மணிகளின் ஒருவர். மேரி தன் சிறுவயதில், ஆன் ஹாஸ்ஸெல்ட்டைன் ஜட்சன் (Ann Hasseltine Judson) என்ற தேவ ஊழியரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்ததும், ஊழியத்தின் மீது வாஞ்சை கொண்டார். மேரி வயதில் வளர வளர, தான் மிஷனரி ஆக வேண்டும் என்ற வாஞ்சையும் தீவிரமடைந்தது. ஒரு நாள், பஃப்பலோ என்னும் ஊரில் ஒரு ஞாயிறு பள்ளி நிறுவனத்தில் பங்கேற்றார். அப்பொழுது, இந்தியாவில் மிஷனரி பணிக்கென பெண்களை விண்ணப்பிக்க கோரி, “கிறிஸ்டியன் விமன்ஸ் போர்ட் ஆஃப் மிஷன்ஸ்” (கிறிஸ்தவ மகளிர் ஊழிய வாரியம்) வெளியிட்ட ஓர் சுற்றறிக்கையை கண்டெடுத்தார். அந்த ஊழிய வாய்ப்பை குறித்து ஜெபித்த பிறகு, “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” என்ற வேதவசனத்தின் மூலம் வழிநடத்துதலை பெற்றார். தேவ சித்தம் தன் வாழ்வில்…

Read More

தாழ்த்தி ஜெபியுங்கள் 2 நாளா 7 : 14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். நொறுங்குண்டு ஜெபியுங்கள்  ஏசாயா 66 : 2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். மன உறுதியோடு ஜெபியுங்கள் எபேசி 6 : 18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.…

Read More

வசனத்தை கைக்கொள்வதால் சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது. 9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன. 11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. நீதிமொழிகள் 13:13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். கர்த்தரை கனம் பண்ணுவதினால் வரும் பலன் கர்த்தரை கனம் பண்ணுவதினால் வரும் பலன் நீதிமொழிகள் 3:9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். இயேசுவின் நாமத்தால்…

Read More

வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சங்கீதம் 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.  வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால் நீதிமொழிகள் 16:7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவனுக்கு ஏசாயா 26:3 உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் கற்பனைகளின் படி நடக்கிறவனுக்கு ஏசாயா 48:18 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். ஆவியின் சிந்தை உடையவனுக்கு ரோமர் 8:6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ஞானம் உடையவனுக்கு யாக்கோபு 3:17பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

Read More

கர்த்தரின்‌ நாமங்கள்‌ “நம்முடைய சகாயம்‌ வானத்தையும்‌ பூமியையும்‌ உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில்‌ உள்ளது. சங்கீதம்‌ 124:8. 1. ஏல்‌ அல்லது ஏலோஹீம்‌ “தேவன்‌ சர்வத்தையும்‌ ஆண்டு நடத்தும்‌ வல்லமையுள்ளவர்‌” என்பது இதன்‌ கருத்தாகும்‌.வேதாகமத்தின்‌ முதல்‌ வசனத்திலேயே இந்த நாமம்‌ சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில்‌ மட்டும்‌ 2500 தடவைகள்‌ இப்பெயர்‌ காணப்படுகிறது. 2. யாவே அல்லது யெகோவா “இருக்கிறவராய்‌ இருக்கின்றேன்‌” (யாத்‌ 3:14) என்பது இதன்‌ கருத்தாகும்‌. இந்நாமத்தை யூதர்கள்‌ உச்சரிக்கத்‌ துணியவில்லை. அப்பயத்தின்‌ காரணமாக உடன்படிக்கைக்குரிய இப்பெயரை உச்சரிப்பது எவ்வாறு என்று அறியாதிருந்தார்கள்‌. “யாவே” சரியான பூர்வக உச்சரிப்பு என்பது பல ஆராய்ச்சியாளருடைய அபிப்பிராயமாகும்‌. இந்த பெயர்‌ கொண்ட தேவன்‌ வாக்குமாறாதவர்‌, தாம்‌ செய்த உடன்படிக்கையை மீறாதவர்‌. சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில்‌ “யெகோவா” என்ற பெயரை பயன்படுத்த முயன்றும்‌ அது சாதாரண மக்களுக்கு விளங்காத காரணத்தால்‌ “LORD” என்று ஆங்கிலத்திலும்‌, தமிழில்‌ தடித்த எழுத்தில்‌ கர்த்தர்‌ என்றும்‌ எழுதியிருக்கிறது. 3. அடோனாய்‌…

Read More

பாவ வாழ்வும் இரட்சிப்பும் ஒரு ஏழைக் குடும்பத்தில் லில்லிஹாம்மர் என்ற ஊரில் நார்வே நாட்டில் 04-02-1840 அன்று பிறந்தார். லார்ஸ் ஓல்சன் ஸ்க்ரெஃப்ஸ்ரட் குறைந்தளவில் கல்வி பெற்றவர். அவர் தனது இளமை பருவத்தில் மோசமான தொடர்புகளுக்குள் சிக்கி கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகவும் ஒரு திருடனாகவும் மாறினார். தனது பத்தொன்பது வயதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது அன்னா ஓல்சம் என்ற அவரது தோழி அவரை சந்தித்து, வேதாகமத்தையும் பிற நற்செய்தியின் இலக்கியங்களையும் படிக்க ஊக்குவித்தார். இறுதியில் லார்ஸ் தனது பாவமான வாழ்க்கையைப் பற்றி மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். மிஷனரியாக அர்ப்பணிப்பு 21 வயதில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், விரைவிலேயே மிஷனெரி பயிற்சிக்காக ஜெர்மனியிலுள்ள கோஸ்னர் மிஷன் சொசைட்டியில் சேர்ந்தார். அங்கு இரண்டு வருடங்கள் அவர் உபவாசம் மற்றும் ஜெபத்தின்…

Read More

1. சந்தோஷத்தால் | சமாதானத்தால் நிரப்புகிறவர் அப் 2: 25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; 26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; 27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; 28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான் ரோமர் 15:13 பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக 2. நன்மையால் நிரப்புகிறவர் லூக்கா 1:53பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். லூக்கா 5:1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார்.…

Read More