3.அதோ உன்‌ தாய்‌ என்றார்‌ – அரவனைப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

யோவான்‌ 19:26-27 தம்முடைய தாயை நோக்க: ஸ்திரியே, அதோ, உன்‌ மகன்‌ என்றார்‌. பின்பு அந்த சீஷனை நோக்கி : அதோ உன்‌ தாய்‌ என்றார்‌.

1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்‌

யாத்திராகமம்‌ 20:12; உபாகமம்‌ 5:16; எபேசியர்‌ 6:2,3 உன்‌ நாட்கள்‌ நீடித்தருப்பதற்கும்‌ உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும்‌, உன்‌ தகப்பனையும்‌

உன்‌ தாயையும்‌ கனம்பண்ணுவாயாக

மத்தேயு 15:4; மத்தேயு 19:19; எபேசியர்‌ 6:3 உன்‌ தகப்பனையும்‌ உன்‌ தாயையும்‌ கனம்‌ பண்ணுவாயாக

யாத்திராகமம்‌ 21:15,17; லேவியராகமம்‌ 20:9 தன்‌ தகப்பனையாவது தன்‌ தாயையாவது அடிக்கிறவன்‌, சபிக்கறவன்‌ கொலைசெய்யப்படக்கடவன்‌ .

உபாகமம்‌ 27:16 தன்‌ தகப்பனையும்‌ தன்‌ தாயையும்‌ தூஷிக்கிறவன்‌ சபிக்கப்‌பட்டவன் …

நீதிமொழிகள்‌ 15:20; ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்

நீதிமொழிகள்‌ 19:26; தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

நீதிமொழிகள்‌ 20:20; தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.

நீதிமொழிகள்‌ 28:24; தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

நீதிமொழிகள்‌ 30:17; தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.

ஏசாயா 45:10 தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!

2. பெற்றோரை கவனித்துகொள்ளுங்கள்‌

நீதிமொழிகள்‌ 23:22 உன்னைப்‌ பெற்ற தகப்பனுக்குச்‌ செவிகொடு; உன்‌ தாய்‌ வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே

மாற்கு 7:10,11,12,13 ஒருவன்‌ தன்‌ தகப்பனையாவது தாயையாவது நோக்கி:உனக்கு நான்‌ செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக்‌ கொர்பான்‌ என்னும்‌ காணிக்கையாகக்‌ கொடுக்கறேன்‌ என்று சொல்‌- விட்டால்‌

அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லிவிட்டால், அவனை இனி தன்‌ தகப்‌பனுக்காவது தாய்க்காவது யாதொரு உதவி செய்ய ஒட்டாமல்‌…

ஆதியாகமம்‌ 47:12 யோசேப்பு தன்‌ தகப்பனையும்‌ தன்‌ சகோதரரையும்‌ குடும்பத்தையும்‌ ஆகாரம்‌ கொடுத்து ஆதரித்துவந்தான்‌.

3. பெற்றோரை காத்துக்கொள்ளுங்கள்‌

லேவியராகமம்‌ 19:3 உங்களில்‌ அவனவன்‌ தன்‌ தன்‌ தாய்க்கும்‌ தன்தன்‌ தகப்பனுக்கும்‌ பயந்திருக்கவும்‌, என்‌ ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்‌

நீதிமொழிகள்‌ 4:3 நான்‌ என்‌ தகப்பனுக்குப்‌ பிரியமான குமாரனும்‌, என்‌தாய்க்கு மிகவும்‌ அருமையான ஒரே பிள்ளையுமானவன்‌.

நீதிமொழிகள்‌ 1:8; 6:20 என்‌ மகனே, உன்‌ தகப்பன்‌ கற்பனையைக்‌ காத்துக்கொள்‌; உன்‌ தாயின்‌ போதகத்தைத்‌ தள்ளாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *