யோவான் 19:28 எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக “தாகமாயிருக்கிறேன் என்றார்”.
1. தாகமாய் இருந்தவர்
மத்தேயு 27:48; மாற்கு 15:36 கடற்காளானை எடுத்து, காடியிலே தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
சங்கீதம் 69:21 என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
யோவான் 4:8,14 தாகத்துக்குத்தா என்று சமாரியா பெண்ணிடம் கேட்டறார். இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது.
2. தாகத்தைத் தீர்க்கிறவர்
யோவான் 7:37,38 ஒருவன் தாமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கறவன் எவனோ, அவன்
உள்ளத்திருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஒடும் என்றார்.
வெளிப். 21:6 நான் அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கறேன். தாகமாயிருக்கறவனுக்கு ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
வெளிப். 22:17 தாகமாயிருக்கறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவச மாய் வாங்கக்கொள்ளக்கடவன்
3. தாகம் தீர்க்க சொன்னவர்
நீதிமொழிகள் 25:21 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு
ரோமர் 12:20 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு
மத்தேயு 25:35 பசியாயிருந்தேன் எனக்குப் போஜனங்கொடுத்கதீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்.
4. தாகமாயிருங்கள்
சங்கீதம் 42:1,2 மானானது நீரோடைகளை வாஞ்சத்துக் கதறுவதுபோல…என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாயிருக்இறது
சங்கீதம் 63:1; தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது,
சங்கதம் 143:6 என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா)