யோவான் 19:30
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
“முடிந்தது” என்றால் என்ன? முடிவுக்கு கொண்டு வருவது, முடிப்பது, நிறைவேற்றுவது. யோவான் 19:28
1. “முடிந்தது” இது வெற்றியின் முழக்கம் தொடங்கின அநேகர் முடித்ததில்லை, இயேசுவோ செய்து முடித்து வெற்றி சிறந்தார்
2. எவைகள் முடிந்தது? எதையெல்லாம் இயேசு முடித்தார்?
a. ஜீவனைக் கொடுக்க வந்தார், – யோ 10:10
b. பலிகள் முடிந்தது – எபிரேயர் 7:27
C. பூமியிலே நியமித்த கிரியையைச் செய்துமுடித்தார் – யோ 17:4
d. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கினார்- எபேசி 2:14-16
e. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் சிலுவையிலே வெற்றிசிறந்தார் – கொலோ 2:13-15
f. தம்மைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றி முடித்தார்- யோவான் 19:28
g. பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடித்தார்-யோவான் 4:24
h. சிலுவையில் போராடி, யாவையும் செய்து முடித்தார்- சங் 138:8
“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது
பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).
3. ஆறாம் வார்த்தை “இயேசு நமக்காக யாவையும் செய்து முடித்தார்” என்ற நிச்சயம் தருகிறது”
“நமக்கு இயேசுவால் நமக்கு நியமித்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறது”
“இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப் பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்” (எபிரெயர் 10:10).
“அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ
[இயேசு], பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்” (எபிரெயர் 10:11-12).
“ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி யிருக்கிறார்” (எபிரெயர் 10:14).