லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார்.
1. பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபிரெயர் 9:14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபேசியர் 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
ஏசாயா 58:10 தன்னைக் குற்றநிவாரணபலயாக ஒப்புக்கொடுத்தார்.
சங்கதம் 31:5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தயபரனாகியகர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
அப்போஸ்தலர் 7:59 (ஸ்தேவான்) கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் ஒப்புக்கொடுத்தான்.
ரோமர் 12:1 உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகறேன்.
2. பாவமில்லாமல் தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபேசியர் 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14 நம்மைச் சுத்திகரிக்கும்படி, தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார்.
பேதுரு 2:83 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவர்களுக்குத் தம்மை ஒப்புவித்தார்.
3. பாதுகாப்பாய் தம்மை ஒப்புக்கொடுத்தார்
யோவான் 10:17,18 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும் படிக்கு அதைக்கொடுக்கிகறபடியால் பிதா என்னில் அன்பாயிருக்கறார்.ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்.
யோவான் 10:29 என் பிதா எல்லாரிலும்
பெரியவராயிருக்கிறார்; அவை களை என் பிதாவின் கையில் இருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கறோம்.