1. உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் (ச௧ 3:4 )என்ற வாக்கின்படி
நல்ல உடைகளுக்காக .
2. எங்கள் பரிகாரியாகிய கர்த்தாவே! உம்முடைய நியமங்களைத் கைக்கொண்டால்,
எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் எங்களுக்கு வரப்பண்
ணேன் (யாத் 15:26) என்ற வாக்கின்படி நல்ல சுக பெலன் ஆரோக்கியத்திற்காக .
3. ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த
கைக்குள் அடங்கியிருங்கள் (பேது 5:6) என்ற வசனத்தின்படி ஏற்றவேளையில்
என்னை உயர்த்தும்படியாக .
4. கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டூ என்றைக்குங்
காப்பார் (சங் 121:8 )என்ற வாக்குத்தத்தத்தின்படி என் பிரயாணங்களில் என்னைப்
பாதுகாக்கும்படியாக.
5. உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச்
செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார் (உபா 15:10) என்ற
வாக்கின்படி என் வேலை மற்றும் தொழிலை ஆசீர்வதிக்கும்படியாக.