கபடு |ஆழமான பிரசங்க குறிப்பு |tamil prasanga kurippugal | Tamil Sermon Notes

கபடு என்பது சூழ்ச்சி , சூது , வஞ்சனை

சங்கீதம் 32:2

எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான். 

1. கபடமில்லாத இருதயம்

கொலோசெயர் 3:22

வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். 

2.கபடமில்லாத ஆவி

சங்கீதம் 32:2

எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.

3.கபடமில்லாத நடக்கை

2 கொரிந்தியர் 1:12

மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. 

4. கபடமில்லாத உதடு

சங்கீதம் 17:1

கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும், கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *