1. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் ஜெபம் கேட்கப்படும்
யோவா 15 : 7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
2. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம்.
யோவா 15 : 5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
3. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் பாவம் செய்யாதிருப்போம்.
1 யோவா 3 : 6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
4. கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் அவர் வருகையில் காணப்படுவோம்
1 யோவா 2 : 28 இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.