சரித்திரத்தில் முதல் மனிதக் கடவுள் நிம்மிரோத். நிம்மராத்தின் காலத்துக்கு முன்பு வரை ஜனங்கள் ஒரே ஒரு தெய்வக் கொள்கை உடையவர்களாக யாவே என்கிற சிருஷ்டிகரை தொழுது வந்தனர்.
இவனைக் குறித்து வேதம்
ஆதி 10: 9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
அவனுடைய வேட்டை
இவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாக இருந்தான் என்று சொல்லப்படுவதற்கான காரணம், அந்த காலத்து ஜனங்கள் மலைகளுக்கு சென்று ஒன்றான மெய் தெய்வத்தை வணங்கி பலியிட்டு திரும்பி கீழே வருவார்கள் அப்படி திரும்பி வருகிற ஜனங்களை இவன் வழிமறித்து கேள்விகளை கேட்பான். நீங்கள் தெய்வத்தை முகமுகமாய் பார்த்தீர்களா தெய்வத்தோடு பேசினீர்களா இல்லை யாவே தெய்வம் உங்களோடு பேசினாரா அவரை நீங்கள் தொட்டீர்களா அவர் உங்களை தொட்டாரா என்று பேசி அவர்களுடைய உள்ளங்களிலே ஐயங்களை எழும்ப பண்ணி குழப்பி விட்டு அவர் தெய்வம் இல்லை என்று சொல்லுவான்.
மேலும் இவன் யாவே தெய்வத்தின் பிள்ளைகளை இப்படி திசை திருப்பி தன் பக்கம் இழுத்துக் கொண்டான். தானே தெய்வம் என்று கூறத் தொடங்கினான் தன்னை ஜனங்கள் பார்க்க முடியும் தன்னோடு பேச முடியும் தன்னை தொட்டு பார்க்க முடியும் என்று அவருடைய உள்ளத்தை மாற்றினான் அவன் தெய்வத்தின் ஜனங்களை தெய்வத்திடமிருந்து பறித்து எடுத்தான். பின்பு பெரிய ராஜ்யத்தை நிறுவினான்.
அவனுடைய இறப்பிற்கு பின்
அவன் தன்னுடைய 32 வது வயதில் இறந்து போனான் ஆனால் அவன் உண்டாக்கிய மதம் அவன் இறப்பதற்கு முன்பே பல இடங்களுக்கு பரவியது. அவனுக்குப் பின் அவனுடைய மனைவி Semiramis என்கிற ishtar பெண் தெய்வமாக மாறினாள். நிம்ரோத் இறந்த பின்பு அவள் கர்ப்பம் தரித்தாள் ஜனங்கள் எல்லாரும் அவளுக்கு விரோதமாக எழும்பி அவளை விபச்சாரி என்று குற்றம் சாட்டினார்கள். அவள் மிகவும் தந்திரம் உள்ளவளாக ஜனங்களிடம் நிம்ரோத் தான் இந்த உலகத்திற்கு மறுபடி வர வேண்டும் என்று தன்னோடு போராடியதாகவும் தன் ஜனங்களோடு பேச வேண்டும் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தன்னுடைய கர்ப்பத்தில் நிம்மோ தான் இருக்கிறார் என்று ஜனங்களிடம் கூறினாள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் tamus.
தெய்வமாக மாறிய குடும்பம்
அந்த நாட்களில் ஜனங்கள் சூரியன் தான் எல்லா சிருஷ்டிப்புக்கும் காரணம் என்னும் சூரியன் இல்லாவிட்டால் ஒன்றும் இயங்காது என்று கருதியதால் நிம்மிரத்தை சூரிய கடவுளாகவும் செராமிசை சந்திர கடவுளாகவும் அவர்களுடைய மகன் அமோசை நட்சத்திர கடவுளாகவும் கருதினார்கள்