1. பரிசுத்தமான பிதாவே
கருணையின் ஆழ்கடலே
கிருபையின் ஊற்று நீரே
ஆறுதல் அளிப்பவரே
நாதா நீர் போதும் எனக்கு – உம்
கிருபை போதும் எனக்கு
என் ஜீவ யாத்திரையில்
கிருபை போதும் எனக்கு
2. ஜீவிய யாத்திரையில்
பாரங்கள் அழுத்தும் போது
சோராமல் ஓடிடவே
கிருபை போதும் எனக்கு – நாதா
3. உலகத்தை ஜெயித்திடவே
பாவத்தை மேற்கொள்ளவே
சத்துருவை எதிர்த்திடவே
கிருபை போதும் எனக்கு – நாதா
4. உம்மையை பின்பற்றவே
ஊழியம் செய்திடவே
ஜெயமாய் வாழ்ந்திடவே
கிருபை போதும் எனக்கு – நாதா







