1) துக்க முகம் இல்லை –
1 சாமுவேல் 1:18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
துக்கமாய் இருந்த அன்னாளின் துக்கம் ஜெபத்திற்கு அப்புறம் மாறியது
2) நிந்தை நீங்கும் –
1 சாமுவேல் 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
பிள்ளை இல்லை என்கிற நிந்தை நீங்கினது
3) ஆத்துமாவில் பெலன் –
சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்.
உள்ளான மனிதனின் சோர்வு நீங்கி ஆத்துமாவில் பெலன் கிடைத்தது .
4) தைரியம் கிடைக்கும் –
சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்.
5) கிருபை கிடைக்கும் –
சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
ஜெபிக்கிறவர்களின் வாழ்க்கையில் கிருபை பெருகினது
6) நன்மையானவைகள் கிடைக்கும் –
மத்தேயு 7:11 ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ஜெபிக்கிறவர்களுக்கு நிச்சயமாய் அதிக நன்மைகள் கிடைக்கும்
7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை –
சங்கீதம் 34:17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
எல்லா பிரச்சனைக்கும் தீர்வு ஜெபம்
8) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்து கொள்ளப்படும் –
பிலிப்பியர் 4:6-7 நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
பிசாசானவன் நம்முடைய சிந்தனை மண்டலத்தை தாக்கி அவிசுவாசம் உண்டாகாதபடி காத்துக்கொள்ளப்படும்
9) இருதயத்தில் தேவ சமாதானம் –
பிலிப்பியர் 4:6-7 நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
ஜெபத்தினால் தேவனிடத்திலிருந்து நமக்கு தேவ சமாதானம் வரும் .