தேசத்திற்கான ஜெபக்குறிப்புகள் 4 | Tamil Prayer Points For India

பயங்கரவாத கட்டுப்பாடு

– உலகம் முழுவதும் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. சொத்துக்களுக்கு சேதம் மிக அதிகமாக உள்ளது. தீவிரவாத பாதிப்பின் நிமித்தம் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை இழந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள் நம்பிக்கையை இழந்ததால் வாழ்வில் மீண்டும் தலை தூக்குவது இல்லை

வறுமை ஒழிப்பு

– இன்று நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வறுமை. உலக வங்கியின் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கை 2022 இல் 145.71 மில்லியனாக (மக்கள் தொகையில் 10.2% ஆக) குறைந்துள்ளது. இந்தியாவில், வறுமைக் கோடு நகர்ப் புறங்களுக்கு ரூ1,286 ஆகவும், கிராமப்புறங்களுக்கு ரூ 1,059.42 ஆகவும் உள்ளது.

விலைவாசிக் கட்டுப்பாடு

– அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகம் உயர்ந்துள்ளது, ஆனால் தனிநபரின் வருமானம் அதிகரிக்கவில்லை. இது ஒரு சாமானியனின் வாழ்க்கையை கடினமாக்குகிறது, இது தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கிறது.

வேதத்தை பின்பற்றும் கிறிஸ்தவர்கள்

– தேசம் ஒரு பெரிய எழுப்புதலை காண வேண்டுமானால், கிறிஸ்தவர்கள் வேதத்தின் படி வாழ வேண்டும். வேதத்திற்கு புறம்பான உலக விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது எத்தனை பரிதாபம். நீங்கள் கிறிஸ்துவை பின்பற்ற விரும்பினால், நீங்கள் உலகத்தைப் கைவிடவேண்டும்.

விவசாயத் துறையை ஊக்குவித்தல்

– நம் நாட்டில் விவசாயிகள் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு வேறு சிலரால் துன்புறுத்தப்படுகிறார்கள். இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள வற்படுத்தப்படுகிறார்கள். அதன் வேதனை தங்க முடியாமல் சிலர் தங்கள் வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதால் அவை செய்திகளில் வெளியே வருவதில்லை

கிராமப்புற வளர்ச்சி

– 2021 கணக்கின் படி இந்தியாவில் 909 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு கல்வி வசதிகள், குடிமை வசதிகள், பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள், சுத்தமான நிர்வாகம், வேலைவாய்ப்பு, சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் இவர்களுக்கு இல்லை. அவற்றைக் கருத்தில் கொள்ளா விட்டால் தேசத்தின் வளர்ச்சி குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *