எபிரேயத்தில் சூசான் என்று அழைக்கப்படும் சூசா (Susa) . இது எலாம் (Elam) என்ற பண்டைய நாகரீகத்தின் தலைநகராக பல நூற்றாண்டாக காணப்பட்டது . இந்தப்பட்டணம் தரியூ ராஜாவின் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கபட்டது கட்டடங்கள் கட்டப்பட்டது .
இது பின் நாட்களில் பெர்சிய பேரரசின் கிழக்குப் பிராந்திய தலைநகராக விளங்கியது . இந்த நகரத்தின் வெப்பநிலை அதிகம் என்பதால் ராஜாக்கள் இந்தப்பட்டணத்தை குளிர் நாட்களில் மட்டும் பயன்படுத்தினர்.