1. அழியும் ஆத்துமாக்கள் மேல் கரிசனை
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நரகத்திற்கு போய்க்கொண்டிருக்கும் இந்த உலகில் கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாக அழியும் ஆத்துமாக்களையும் அவர்கள் இயேசுகிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் கொடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு சுவிசேஷம் சொல்லப்படவேண்டும்.
2. கிறிஸ்துவின் அன்பு நம்மில் ஊற்றப்பட்டுள்ளதால்
2கொரிந்தியர் 5:14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
பவுல் தன் இனத்தாருக்காக தான் சபிக்கப்பட்டவனாக
வேண்டும் என்று கூறுகிறார். ரோமர் 5:3.
3. இது தேவனுடைய கட்டளை ஆகும்
மத் 28: 18-20அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
ஆத்தும ஆதாயம் என்பது விசுவாசிக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு
ஆகும்.
4. நாம் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகள்
2 கொரி 5: 20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
நாம் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாயிருந்து கிறிஸ்துவுக்கென்று வாழ்ந்து. கிறிஸ்துவை அறிவிப்பவர்கள். நரகத்திற்கு செல்லும் பிள்ளைகளை தேவனோடு ஒப்புரவாக்கும் உன்னதமான சுவிசேஷ ஊழியத்தை
செய்பவர்கள்.
5. நம் மேல் விழுந்த கடமை
1 கொரி 6:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
பவுல் தன்னை யாவருக்கும் சுவிசேஷத்தினிமித்தம் கடனாளி என்று கூறுகிறார். ரோமர் 1:14 நாம் துன்மார்க்கனுடைய இரத்தப்பழிக்கு நீங்கலாகும்படி கொடுக்கப்பட்ட ஊழியம் இது.
6. அறுவடை தயாராக இருக்கிறது
யோவான் 4:35 அறுப்புகாலம் வருவதற்கு இன்னும் நாலு மாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிரதில்லையா? இதோ வயல் நிலங்கள் இப்போழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்
மத் 9:37,38 அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம் அதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலை ஆட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கெள்ளுங்கள் என்றார்.
7. சுவிசேஷம் தேவ பெலனுள்ளது
ரோமர்1:16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. சத்தியம் வர்களை
விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்.
8. நரகத்திலிருந்து கூக்குரல்:
லூக் 6 :27, 28 தான் நரகத்தில் வேதனைப்படுவதை தாங்கமுடியாத நிலையில் தன் சகோதரர்கள் நரகத்தில் வராதபடி அவர்களுக்கு சாட்சியாக லாசரஸ் அனுப்பப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் ஐசுவரியவானின் வேண்டுதல் நரகத்தின் கூக்குரலை நமக்குத் தெரிவிக்கிறது.
9. பரலோகத்தை சந்தோஷப்படுத்துங்கள்:
லூக்கா 15:4-7 நூறு ஆடுகளில் ஒரு ஆடு காணாமல் போனாலும் மேய்ப்பன் அதை கண்டுபிடிக்கும்வரை ஓய்ந்திருக்கமாட்டான். ஒரு பாவி மனந்திரும்பும் போது பரலோகத்தில் ஒரு பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது.
10. சுவிசேஷம் சொல்வதினால் நமக்கு ஒரு பெரிய பரிசு உண்டு
சங்126:5,6 கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
2 தீமோ 4:8 நீதியின் கிரீடம் எனக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று பவுல்
கூறுகிறார். சுவிசேஷ ஊழியம் செய்வதின் மூலம் நமக்கு மறுமையில் அவர் பிரதிபலனை வைத்திருக்கிறார்.