1. தமிழகத்தில் ஆண்டிற்கு சுமார் 10,000 பேர் தற்கொலை செய்து மரிக்கின்றனர்.
இதில் 70 சதவீதம் பேர் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். தற்கொலையின்
ஆவியால் பாதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட ஜெபிப்போம் .
2. தமிழகத்தில் ஒரு ஆண்டில் ஏறக்குறைய பதினோரு இலட்சத்து எழுபதாயிரம்
பிள்ளைகள் பிறக்கின்றனர். இவர்கள் வளரும்போது கர்த்தரை அறிந்து
ஏற்றுக்காள்ளும்படி ஜெபிப்போம்.
3. தமிழகத்தில் சராசரியாக தினமும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால்
கொல்லப்படுகிறாள். வரதட்சணை முறை மாறுவதற்கு அரசாங்கம் கடுமையான
நடவடிக்கைகளை எடுக்க ஜெபிப்போம்.
4. அரக்கோணம் பகுதிகளில் பெண்களை கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தும்
தேவதாசி முறை இன்னும் நடைமுறையில் உள்ளது. இக்கொடிய பழக்கத்தை
அரசாங்கம் முற்றிலும் தடைசெய்ய ஜெபிப்போம்.
5. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக, ஆண்டுக்கு சுமார் ஒரு
இலட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர். இப்பாவம் தடுத்து
நிறுத்தப்பட மன்றாடி ஜெபிப்போம்.
6. தமிழகத்தில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டூள்ள 9 இலட்சம் பெண்கள்.
தங்களுக்காக இரத்தம் சிந்தின இயேசு கிறிஸ்துவிடம் திரும்பவும்,
குணமடையவும் வேண்டிக் ஜெபிப்போம்.
7. தமிழகத்தில் புகைப்பழக்கத்திற்கும், போதைப்பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ள
80 சதவீத இளைஞர்களை தேவன் விடுவிக்கும்படி ஜெபிப்போம்.
8. சிறுபண்களை கடத்திச் சென்று விபச்சாரத் தொழிலில் ஈடுபடவைப்பதில்
தமிழகம் முன்னணியில் உள்ளது. இப்பிள்ளைகள் மீட்கப்படவும்,
இக்கொடுமையை செய்பவர்களை அரசாங்கம் தண்டிக்கவும்ஜெபிப்போம்.
9. தமிழகத்தில் நான்கு இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 5௦ சதவீதம் பேர் கல்லூரி மாணவர்கள். தேவன் மனமிறங்கி இவர்களை இரட்சிக்க ஜெபிப்போம்.