ஆரோக்கியம் உண்டாக.
எரேமியா 33:6
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.
1. சரீர சுக பெலன் ஆரோக்கியம் உண்டாக.
2. சிந்தனை மண்டல ஆரோக்கியம் உண்டாக
3. மனநிலை ஆரோக்கியம் உண்டாக
சமாதானம் உண்டாக
சங்கீதம் 40:16
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
தேவைகள் சந்திக்கப்பட
உபாகமம் 28:5
உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
- உணவு
- உடை
- இருப்பிடம்
பிரயாணங்களில் பாதுகாப்பிற்க்காக
சங்கீதம் 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
வேலையில் ஆசீர்வாதத்துக்காக
உபாக 28:8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
தனிப்பட்ட வாழ்வில் தேவ சித்தம் நிறைவேற
மத்தேயு 6:10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
சுபாவ மாற்றம் ஆவிக்குறிய வளர்ச்சி உண்டாக
லூக்கா 3:9
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.
பயனுள்ள பாத்திரமாய் மாற
2 தீமோத்தேயு 2:21 ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்