புத்திர பாக்கியத்தால்
சங் 17 . 14. கர்த்தாவே, மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.
🔥 அன்னாள் .
- ஒரு பிள்ளைக்காக வேண்டினாள்
- ஒரு ஆண் பிள்ளையோடு கூட பல பிள்ளைகளை கொடுத்தார்
- அந்த ஆண் பிள்ளை சாதாரண பிள்ளையாக இல்லை தீர்க்கதரிசியாக நியாயம் விசாரிக்கிறவனாக ராஜாக்களை அபிஷேகம் பண்ணுகிறவனாக இருந்தான்.
உணவால்
சங் 81: 16. உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்
- பஞ்ச காலத்திலும்
நன்மையால்
சங் 103 : 5. நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
மத் 7 : 11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
வாஞ்சையால்
சங் 145 : 16. நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்







