1. சிறிய எளிய என்னை நோக்கிப்
பார்த்து புழுதியில் இருந்து தூக்கி விட்டு
என்னைப் பிரபுக்களோடே உட்காரவும்
மகிமையுள்ள சிங்காசனம் சுதந்தரிக்கப் பண்ணும் தேவனே
விருத்தியாக்குவார் விசாலமாக்குவார்
பலுகிப் பரம்பி படர்ந்திடச் செய்வார்
தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்வார்
நிரம்பி வழிந்து ஓடிடச் செய்வார்
2. மதிலுக்குள்ளே அடைத்து காயப்படுத்தி
மனிதர் சொற்களாலே மனதை வருத்தி
என்னை மட்டுப்படுத்த நினைத்தோர் முன்பு
மதிலின் மேலே பரடச் செய்து
கனி தரும் செடியாய் மாற்றுவார்
3. வீட்டார் தரிசனத்தை அவமதித்தும்
வேண்டாம் என்று ஏகமாய் வெறுத்தும்
என்னை தரிசனங்கள் காணச் செய்த தேவன் என்னுடன் இருந்து
காரியத்தை வாய்த்திடச் செய்வார்
4. செய்த நன்மைகளை மறந்து விட்டு
செய்யாத குற்றத்தை சுமத்தி விட்டு
என்னைத் தனிமையிலே கண்ணீர் சிந்த வைத்த போது தேடி வந்து
வாழ்வு தந்து பெருகிடச் செய்வார்.






