கர்த்தருடைய வார்த்தைகளின் வகைகள் | புதிய பிரசங்க குறிப்புக்கள் | New Tamil Sermon Outlines

A Study By Pastor Jothy Rajan (9585758975)

காண்க : தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது ? எதற்கு ?

வாக்குத்தத்தமான ஆசீர்வாத வார்த்தைகள் 

    ஆதியாகமம் 15:1

    இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

    சட்ட திட்டங்கள் அடங்கிய வார்த்தைகள் 

      யாத்திராகமம் 24:3

      மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

      குறிப்பிட்ட காரியத்தை செய்யச் சொல்லும் வார்த்தை 

        1 சாமுவேல் 15:1

        பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:

        1 சாமுவேல் 15:13

        சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

        எச்சரிக்கும் வார்த்தைகள்

          2 சாமுவேல் 7:4

          அன்று இராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:

          நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள்

            1 இராஜாக்கள் 16:1

            பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்:

            வழிநடத்தும் தேவ வார்த்தை

              1 இராஜாக்கள் 17:5

              அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.

              தீர்க்கதரிசனமான வார்த்தைகள் 

                2 இராஜாக்கள் 7:1

                அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

                நியாயத் தீர்ப்பின் வார்த்தைகள் 

                  ஓசியா 4:1

                  இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.

                  Leave a Reply

                  Your email address will not be published. Required fields are marked *