தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது ? எதற்கு ? ஆழமான பிரசங்க குறிப்பு pdf |

A Study By Pastor Jothy Rajan (9585758975)

ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தில் தேவன் தம்முடைய வார்த்தையாலே பூமியில் உள்ள யாவையும் சிருஷ்டிக்கிறதை பார்க்க முடிகிறது .  ஆகவே தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது ? எதற்கு ? என்று தேவ வார்த்தையின் மகத்துவத்தை தியானிக்கும் பொது கிடைத்த பிரசங்க குறிப்பு

ஜீவன் உள்ளது

    எபி 4: 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

    • ஜீவன் உள்ளது – இன்றைக்கும் வாழுகிற ஒன்று (இது சரித்திர புத்தகம் அல்ல ஜீவன் உள்ள தேவனுடைய வார்த்தை)

    மத்தேயு 24:35

    வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

    வெறுமையாய் திரும்பாது 

      ஏசா 55 : 11 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

      சங்கீதம் 107:20

      அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

      • வார்த்தையால் சுகமடைந்து நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன்

      மத்தேயு 8:8

      நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

      • வாக்குத்தத்தம்

      சங்கீதம் 119:49

      நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். 50 அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.51 அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

      • யோசேப்பின் வாழ்வு 

      தீபமும் வெளிச்சமாக இருக்கிறது (ஞானத்தின் ஊற்று ) 

        சங் 119 : 105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

        வசனம் தனக்குள் இல்லாதவன் இருட்டில் இருக்கிறான். இருட்டில் இருக்கிற எவனும் பிறருக்கு வழிகாட்ட முடியாது

        ஆவிக்குரிய வாழ்வில் வளர செய்கிறது

          மத் 4 : 4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

          சங்கீதம் 119:9

          வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே..

          1 பேதுரு 2:3

          நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *