A Sermon outline by Pas Jothy Rajan(9585758975)
ஒரு நாள் ஜெபித்து வேதத்தை வாசித்த பொது தேவன் எண்ணாகமம் 34 : 2 கு நேரே நடத்தினார் , அதில் சுதந்திரம் என்கிற வார்த்தையை தியானித்த பொது கிடைத்த பிரசங்க குற்றிப்பு
- சுதந்திரம் என்றால் ஆசீர்வாதம் அல்லது சொத்து
2 விதத்தில்
- கிடைக்கப்போகும் சுதந்திரம்
எண் 34 : 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது;
- ஏற்கனவே இருக்கிற சுதந்திரத்தில் ஆசீர்வாதம்
சங்கீதம் 28:9
தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
யாருக்கு சுதந்திரம் ?
கேட்கிரவர்களுக்கு
சங்கீதம் 2:8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
- யாபேஸ் ( துக்கம் / பிரட்சனை)
1 நாளாகமம் 4:9
யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
- அக்சாள்
நியா 1 : அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.
14 அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
15 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள்
சங்கீதம் 37:9
பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
- ஆபிரகாம்
- தாவீது
- யோபு
சாந்தகுணமுள்ளவர்களுக்கு
சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
அவர் வழியைக் கைக் கொள்கிறவர்களுக்கு
சங்கீதம் 37:34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கு
சங்கீதம் 37:22
அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.
எப்படிப்பட்ட சுதந்திரம்
சங்கீதம் 16:6
நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.







