இயேசு தரும் விடுதலை
1 – சிறையிருப்பிலிருந்து
லூக் 4:18: “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,”
யார் நம்மை சிறைப்படுத்துகிறார் ?
யோவா 10:10: “திருடன்
- திருடவும்
- சமாதானத்தை
- சந்தோஷத்தை
- ஆசீர்வாதத்தை
யோபுவின் ஆசிர்வாதத்தை திருடிய பிசாசு
- கொல்லவும்
மாற் 9:17-18: “அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது;
அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.”
மாற் 9:22: “இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.”
- அழிக்கவும்
- பாவத்தில் தள்ளி உன்னை அளிக்க
வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”
ஏன் பிசாசின் சிறையிருப்பு மாறவில்லை
- தேவனுக்கு உண்மையான வாழ்க்கை இல்லை
- வேறுபாட்டின் வாழ்க்கை இல்லை
- விக்கிரகங்களுக்கு உலக சடங்குகளுக்கு வேறுபடுகிற வாழ்க்கை
2 – பலவீனத்தினின்று
லூக் 13:12: “இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,”
18 ஆண்டுகளாக ஒரு பெண் கூனிய நிலையில் இருந்தாள்.
அவளால்:
- நேராக நிற்க முடியவில்லை.
- தன்னை உயர்த்திப் பார்க்க முடியவில்லை.
- மற்றவர்களைப் போல வாழ முடியவில்லை.
ஆனால் இயேசு அவளைப் பார்த்தார்.
அவள் இயேசுவிடம் வருவதற்கு முன்பே இயேசு அவளுடைய நிலையை அறிந்திருந்தார்.
இன்று:
“என்னால் முடியாது” என்று சொல்லும் வாழ்க்கையை இயேசு மாற்ற முடியும்.
உன் பலவீனம் உன் அடையாளம் அல்ல.
உன் கடந்த காலம் உன் எதிர்காலம் அல்ல.
உன் தோல்வி உன் முடிவு அல்ல.
3 – பாவத்திலிருந்து
யோவா 8:34-36: “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”
ரோம 6:22: “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.”
பாவம் முதலில் ஒரு தேர்வு போலத் தெரியும்.
பிறகு அது ஒரு பழக்கம் ஆகிறது.
பிறகு அது ஒரு அடிமைத்தனம் ஆகிறது.
இறுதியில் அது மனிதனின் எஜமானாக மாறுகிறது.
ஆனால் இயேசு சொல்கிறார்:
“குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” — யோவான் 8:36
இங்கே இயேசு வெறும் பாவமன்னிப்பைப் பற்றி மட்டும் பேசவில்லை.
அவர் பாவத்தின் அதிகாரத்திலிருந்தும் விடுதலை தருகிறார்.
ரோமர் 6:22
“நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால்…”
ஒரு அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தவுடன் இன்னொரு எஜமானைத் தேர்ந்தெடுக்கிறோம்.
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து → தேவனுடைய அடிமைத்தனத்திற்கு.
அதுவே உண்மையான சுதந்திரம்.
4 – மரணத்திலிருந்து
ரோம 8:2: “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.”
எபி 2:14-15: “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.”
5 – இருளின் அதிகாரத்திலிருந்து
கொலோ 1:13: “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.”
அவன் செயல்படுவது:
- ஏமாற்றுவதன் மூலம்
- சோதிப்பதன் மூலம்
- குற்றஞ்சாட்டுவதன் மூலம்
- பயமுறுத்துவதன் மூலம்
- பிரிவை ஏற்படுத்துவதன் மூலம்
- பாவத்திற்கு இழுப்பதன் மூலம்
- தேவனுடைய சத்தியத்தை சந்தேகிக்கச் செய்வதன் மூலம்



