பெயர் அர்த்தம் : a teacher (ஆசிரியர்) அல்லது lofty (உயர்ந்தவர், உயரமானவர்), Mountain of strength ( வலிமையான மலை) .
குடும்பம்
யாத் 6 : 20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
23 ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம் பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
கோத்திரம் : லேவி
தகப்பன் பெயர் : அம்ராம்
தாயின் பெயர் : யோகெபேத்
சகோதரர்கள் பெயர் : மோசே
சகோதரிகளின் பெயர் : மிரியாம்
இவர் தன்னுடைய சகோதரன் ஆகிய மோசேயைவிட மூன்று வயது பெரியவர், தன்னுடைய சகோதரியாகி மிரியாமை விட சிறியவர்.
மனைவியின் பெயர் : எலிசபா
பிள்ளைகளின் பெயர் : நாதாப், அபியு, ஏலேயாசர், இத்தமார்.
- மோசேக்கு பதிலாக பார்வோனிடமும் ஜனங்களிடமும் பேச தேவனால் நியமிக்கப்பட்டவன். யாத் 4: 14 – 16.
- சீனாய் மலைக்குப் போகிற வழியில் அமலேக்கரோடு நடந்த யுத்தத்தில் ஆரோனும் ஊரும் சேர்ந்து மோசையின் தளர்ந்த கைகளை உயர்த்திப் பிடிக்க உதவி செய்தனர் அதனால் யுத்தத்தில் ஜெயம் கிடைத்தது. யாத் 17:9
- மோசே சீனாய் மலையில் 40 நாள் உபவாசித்து கொண்டிருந்தபோது, ஜனங்களின் கட்டாயத்தின் பேரில் விக்கிரகங்களை உண்டு பண்ணினான் யாத் 9: 20
- இவனே இஸ்ரவேல் ஜனங்களின் முதல் பிரதான ஆசாரியன் ; இவனுடைய குடும்பம் ஆசாரிய ஊழியத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. யாத் 29: 9
- மேரிபாவின் தண்ணீரை பற்றிய காரியத்தில் மோசையோடு சேர்ந்து ஆரோனும் பாவம் செய்ததால் அவன் காணான் தேசத்துக்குள் பிரவேசிக்கவில்லை. எண் 20: 24
- தன் சகோதரியாகிய மிரியாமோடு சேர்ந்து ஆரோனும் மோசைக்கு விரோதமாக முறுமுறுத்தார். எண் 12
- ஓர் மலையின் உச்சியில் மரித்துப் போனான் . எண் 20: 28