நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
உங்க கி ருபை என்னை தாங்கினது அன்பு இயேசுவே
நான் தடுமாறும் போது என்னை தாங்கினீரய்யா
என்னை அதிசயமாய் நடத்திய எந்தன் இயேசய்யா
நடத்தி வந்தீங்க ஆனால் நடத்தி வந்திங்க
தாங்கிக் கொண்டிங்க – கரத்தில் ஏந்திக்கொண்டிங்க
என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல –
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல –
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல –
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல –
என் வாய் பெலத்தால் வாழப் பார்த்தேன் வாழ முடியல


