பெயர் அர்த்தம் : நிம்ரோத் என்கிற எபிரேய வார்த்தையின் அர்த்தம் ” கிளர்ச்சி செய்பவன் – rebel “
தகப்பன் பெயர் : கூஷ்யுடைய மகன், காமுடைய பேரன்.
- ஆதியாகமம் 10: 8, 9 ல் இவன் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு பராக்கிரமசாலியாக காணப்பட்டான் என்பதையும் . இவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக் காரனாயிருந்தான் என்பதையும் பார்க்க முடியும் .
- ஆதியா 10: 10, 11 இவர் மெசபடோமிய பகுதியில் தன்னுடைய இராஜ்யத்தை நிருவினவர் . இவர் ஆட்சி செய்த பட்டணங்கள் சிநேயர் தேசத்திலிருந்த பாபேல், ஏரேக், அக்காத், கல்னே. பின்பு அவர் அங்கிருந்து அசீரியாவுக்கு போய் நினிவேயையும் மற்ற பட்டனங்களையும் கட்டினார். இவைகள் நிம்ரோதின் தேசம் என மீகா 5: 6ல் குறிப்பிடப்பட்டுள்ளது .
- இந்த நிம்ரோத்தை வேறு சரித்திர புத்தகங்களில் அடையாளம் கான முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் அவைகள் பொருந்தாதாக காணப் படுகிறது . .eg (அக்காடிய கடவுள் நிமுத்ரா, பாபிலோனியா கில்காமேஷ் , அசீரிய ராஜா ட்டுகுள்டி- நிமுத்ரா 1)