பெயர் அர்த்தம் : அகாஸ்வேரு என்கிற பெயர் பெர்சிய ராஜாக்களை குறிக்கிற பட்டப்பெயராக இருக்கலாம் . ஏனனில் வேதத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட அகாஸ்வேருக்கள் இருக்கின்றனர்.
வேதத்தில் உள்ள அகாஸ்வேருக்கள் :
- தானியேல் 9.1 இல் சொல்லப்பட்டுள தரியு வின் தகப்பன் . இவரின் மற்றொரு பெயர் cyaxares , இவர் நினிவே ஐ வென்றவர் . (காலம் 634 BC).
- 2. எஸ்ரா 4.6 இல் சொல்லப்பட்டுள்ள பெர்சிய ராஜா , Cambyses ஆக இருக்க வேண்டும் . கோரேசுக்கு பின் அரசாண்டவர் , கோரரேசின் மகன் .(காலம் 529 BC).
- 3. எஸ்தர் 1.1 சொல்லப்பட்ட சொல்லப்பட்ட ராஜா . சரித்திரத்தின் படி இவரின் கிரேக்க பெயர் Xerxes 1 ஆக இருக்கும் .(காலம் 485 – 465 BC). இவருடைய பெர்சிய பெயர் Khshayarsha .
இவர் கோரேசின் மகள் அட்டோசா (Atossa) விற்கும் , தரியூ ராஜாவுக்கும் பிறந்தவர். ஆகவே தரியூ ராஜாவிற்கு அடுத்து ராஜ்யபாரம் இவரிடம் வந்தது .
இவர் தன்னுடைய ராஜயபரத்தின் 3 ஆம் வருஷத்தில் சூசான் இல் தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியர்களுக்கும் விருந்து பண்ணினான் . தன்னுடைய மனைவி வஸ்தி தன்னுடைய அழைப்பிற்கு இணங்க விருந்தில் கலந்து கொள்ளாததால் அவரை விவாஹரத்து பண்ணி பின் நான்கு ஆண்டுகள் கழித்து யுத பெண்மணி எஸ்தரை மணந்தார் . எஸ்தர் மொர்தக்காயின் சிறிய தகப்பன் மகள் .