4.என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் – தத்தளிப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

மத்தேயு 27:46; மாற்கு 15:34 ; ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

சங்கதம்‌ 22:1 என்‌ தேவனே, என்‌ தேவனே, ஏன்‌ என்னைக்‌ கைவிட்டீர்‌? என்‌ வார்த்தைகளை கேளாமல்‌ ஏன்‌ தூரமாயிருக்கறீர்‌?

1. பாவமறியாதவர்‌ நமக்காக பாவமானார்‌

கொரிந்தியர்‌ 5:81 நாம்‌ அவருக்குள்‌ தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம்‌ அறியாத அவரை நமக்காகப்‌ பாவமாக்‌கினார்‌.

எபிரெயர்‌ 4:15 எல்லாவிதத்திலும்‌ நம்மைப்போல்‌ சோகிக்கப்பட்டும்‌, பாவமில்லாதவராயிருக்கற பிரதான ஆசாரியரே நமக்‌கிருக்கிறார்‌.

1 யோவான்‌ 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

ரோமர்‌ 8:3 தம்முடைய குமாரனைப்‌ பாவ மாம்சத்தின்‌ சாயலாகவும்‌, பாவத்தைப்‌ போக்கும்‌ பலியாகவும்‌ அனுப்பி, மாம்சத்தலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்‌ தீர்த்தார்‌.

யோவான்‌ 1:29 உலகத்‌கின்‌ பாவத்தை சுமந்து தீர்க்‌கற தேவாட்டுக்குட்டி

2. ஒன்றாயிருந்தவர்‌ நமக்காக தனிமையானார்‌

ஏசாயா 59:2 உங்கள்‌ அக்‌கிரமங்களே உங்களுக்கும்‌ உங்கள்‌ தேவனுக்கும்‌ நடுவாகப்‌ பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள்‌ பாவங்களே அவர்‌ செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

யோவான்‌ 10:30 நானும்‌ பிதாவும்‌ ஒன்றாயிருக்‌கறோம்‌ என்றார்‌.

யோவான்‌ 8:29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்.

யோவான்‌ 16:32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

3. அருகிருந்தவர்‌ நமக்காக தூரமானார்‌

சங்கீதம்‌ 22:11 என்னைவிட்டுத்‌ தூரமாகாதேயும்‌; ஆபத்து நெருங்கியிருக்கறது

சங்கீதம்‌ 22:19 கர்த்தாவே, தூரமாகாதேயும்‌; சகாயம்பண்ணத்‌ தீவிரியும்‌

சங்‌கீதம்‌ 38:21 என்னைக்‌ கைவிடாதேயும்‌; எனக்குத்‌ தூரமாகாதேயும்‌

அப்போஸ்தலர்‌ 17:27 அவர்‌ நம்மில்‌ ஒருவருக்கும்‌ தூரமானவரல்லவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *